நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் ’கான் சிட்டி’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’கான் சிட்டி’. புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை பவர் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் அனா பென், வடிவுக்கரசி, யோகி பாபு ஆகியோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கான் சிட்டி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ராதாரவி, பொன்வண்ணன், ரமேஷ் திலக், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, பரத்வாஜ் ரங்கன், தீபா ராமானுஜம், ஷாஜி சென் ஆகியோரின் கதாபாத்தி அறிமுக போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கான் சிட்டி படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டன.
அதில், அர்ஜுன் தாஸ் - சரவணா, அனா பென் - மித்ரா, யோகி பாபு - ஜாக்கி, வடிவுக்கரசி - ஜானகி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் க்ளிம்ப்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் கோடை வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

யோகி பாபு / வடிவுக்கரசி
Summary
Con City: Introduction to the Main Characters!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கான்சிட்டி பாடல்!

கான் சிட்டி படத்தில் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்?

இந்திரா பாடல் வெளியீடு!

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி! புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


