நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்‌ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்

நடிகை சமந்தா மற்றும் ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி கூட்டணியில் தெலுங்கில் உருவாகியுள்ள புதிய படம் ’மா இன்டி பங்காரம்’.

News image

எங்கள் தங்கம் படத்தில் சமந்தா

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

நடிகை சமந்தா மற்றும் ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி கூட்டணியில் தெலுங்கில் உருவாகியுள்ள புதிய படம் ’மா இன்டி பங்காரம்’.

சமந்தா தயாரித்துள்ள இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காதலால் பிரிந்த தனது கணவரின் குடும்பத்துடன் இணைவதற்காக கணவர் வீட்டிற்கு வருகிறார் ஸ்வர்ணா (சமந்தா). குடும்ப அமைப்பிற்குள் தன்னை பொருத்திக் கொள்வதற்கும் கணவரின் குடும்பத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் சமைப்பது பூஜை விவகாரங்களை செய்வது குடும்பத்திற்கு உழைப்பது என சமந்தா முயற்சி செய்யும் வேளையில் அவரை சுற்றி சுழல்கிறது ஒரு மர்மம். ஏற்கெனவே சிறையில் இருக்கும் ஆயுத கும்பல் தலைவன் சமந்தாவை தேட அதை மோப்பம் பிடிக்கும் சமந்தா அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். சமந்தா யார்? சமந்தாவை துரத்தும் அந்த கும்பலின் தலைவன் யார்? இருவருக்கும் என்ன தொடர்பு? இந்த மர்மமான வலைக்குள் இருந்து எப்படி தப்பித்தாரா அல்லது தான் விரும்பிய குடும்ப வாழ்க்கைக்குள் திரும்பினாரா ஸ்வர்ணவாக வாழும் ஜான்சி என்பதுதான் எங்கள் தங்கம் திரைப்படத்தின் கதை.

ரசிகர்களை கொள்ளை கொண்டு வந்த சமந்தா புதிய ஆக்சன் அவதாரத்தில் விளையாடி இருக்கிறார். குடும்பப் பெண்ணாக மாறுவதற்கு அவர் செய்யும் நகைச்சுவையான முயற்சிகளும், ஒளிவு மறைவு வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்திற்கான உடல் மொழிகளிலும் ஸ்கோர் செய்கிறார் சமந்தா. தன்னை துரத்தும் ஆயுத கும்பலின் தலைவனிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அவர் செய்யும் முயற்சிகள் திரைக்கதையாக விரிகின்றன. சண்டைக் காட்சிகளில் தேர்ந்த பயிற்சி மூலம் அதிரடி காட்டியிருக்கிறார் சமந்தா. வில்லன்களுடன் அவர் போடும் சண்டைகள் திரையைக் கவர்கின்றன. சண்டைக் காட்சிகளில் எல்லாம் அதிரடி ஹீரோக்களை இடது கையால் டீல் செய்திருக்கிறார் சமந்தா.

சமந்தாவிற்குப் பிறகு முக்கிய கதாபாத்திரமாக வில்லன் கதாபாத்திரம் உள்ளது. காடுகளில் ஒளிந்து வாழும் புரட்சிக் கும்பலாக காட்டப்பட்டாலும் அடிப்படையில் தனது சுயலாபத்திற்காக இயங்கும் குணாதிசயம் கொண்ட இந்த கதாபாத்திரம் இரண்டாம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. சமந்தாவின் மீது கொண்ட ஈர்ப்பால் அவரை தொந்தரவு செய்யும் வில்லன் வசனங்களாக பேசிக் கொண்டே இருப்பதால் சலிப்படையச் செய்கிறார்.

குடும்ப உறுப்பினர்களாக வரும் சின்ன மருமகளுக்கும், சமந்தாவிற்கும் இடையேயான போட்டி, சமந்தாவிற்காக உதவும் அவரது தோழி கதாபாத்திரம் ஆகியவை கவனம் பெறுகின்றன.

முதல் பாதியில் வேகமாக கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர் அதன்பின் லாஜிக் கேள்விகளுக்குள் நம்மை சிக்க வைத்து விடுகிறார். புரட்சிகர படை என சேரும் கூட்டம் அதன் தலைவனாக வரும் வில்லன் மோசமானவன் என தெரிந்த பிறகும் அவன் கட்டளையை ஏற்று பின்தொடர்வார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது. அதை ரசிகர்கள் நம்புவார்கள் என இயக்குனர் ஏன் நினைத்தார் என்பதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தினாலும் புரிந்துகொள்ள முடியாது போல. தனது தோழிக்குகூட தான் என்ன செய்கிறேன் என்பதை ஒரு கொலைக்குப் பிறகு சமந்தா சொல்ல அதையும் அப்பாவியாக ஏற்றுக் கொண்டு வேலை செய்கிறார் அவர். அவருக்கு குடும்பம் இல்லையா? எதற்காக சமந்தாவிற்காக அவர் இவ்வளவு உழைக்க வேண்டும் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. வில்லனுடன் இருக்கும் இதர போராளிகள் என்ன ஆனார்கள்? முதலமைச்சருடன் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு வரை பேசும் அதிகாரம் படைத்த அரசியல்வாதி மாமனார் தனது குடும்பத்தை காக்க முடியாமல் சராசரி மனிதன் போல ஓடுவது ஏன் என நீளுகின்றன லாஜிக் கேள்விகள். பரபரப்பு கிளப்ப பயன்பட்டிருக்கிறது சந்தோஷ் நாராயணன் இசை.

ஆக்சன் காட்சிகளுக்காகவும், சமந்தாவின் நடிப்பிற்காகவும் மட்டும் எங்கள் தங்கம் மினுக்கிறது.

Summary

'Maa Inti Bangaram' is a new Telugu film created through the collaboration of actress Samantha and Oh! Baby director Nandini Reddy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.