பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐப்பசி மாதப் பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கும் இந்த மாதம்..

aippasi month predictions

மாதப் பலன்கள்

Published On :20 அக்டோபர் 2026, 5:52 pm IST

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பஞசம  ஸ்தானத்தில் கேது - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப  ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக  ஸ்தானத்தில் சனி (வ) என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

20-10-2026 அன்று குரு பகவான் அதிசாரம் பெற்று சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று ராகு பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று கேது பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை  ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.  குருவால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில்  இருப்பவர்களுடன் கோபமாக  பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாக லாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

 அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

 மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

அஸ்வினி:

இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி:

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை:

இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள் - நவ 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள் - அக் 21, 22, 23

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.