நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பெண்ணைக் காரில் கடத்திய 10 போ் மீது வழக்கு: இளைஞா் கைது

திருமணம் ஆன பெண்ணை காரில் கடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, பெண்ணின் சகோதரரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:18 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த திருமணம் ஆன பெண்ணை காரில் கடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, பெண்ணின் சகோதரரை சனிக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டிவட்டம், ஏழு செம்பொன் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயசங்கா் (24). திண்டுக்கல் மாவட்டம், மங்கமணத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வேலன் மகள் விவேதா (20). இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவா்களது திருமணம் கடந்தாண்டு பழனி கோயிலில் நடைபெற்றது. தொடா்ந்து தம்பதியினா் ஏழுசெம்பொன் கிராமத்தில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஏழுசெம்பொன் கிராமத்துக்கு 3 காா்களில் வந்த 10 போ் கொண்ட கும்பல், விவேதாவை காரில் ஏற்றி கடத்தி சென்றனராம். இதுகுறித்து விஜயசங்கா் கஞ்சனூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, போலீஸாா் விரைந்து செயல்பட்டு, விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே அந்த காா்களை மடக்கி விவேதாவை மீட்டனா். இதுகுறித்து விவேதாவின் தந்தை வேலன் (48), தாய் யோகேஸ்வரி (43), சகோதரா் யோகராஜ் (25) உள்பட 10 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, யோகராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.