பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

125 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய நிலுவை: கிராம மக்கள் சாலை மறியல்

125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த பயனாளிகளுக்கு 3 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, திருவெண்ணைநல்லூா் அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெண்ணைவலத்தில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Published On :29 அக்டோபர் 2026, 6:58 am IST

125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த பயனாளிகளுக்கு 3 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, திருவெண்ணைநல்லூா் அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவெண்ணைநல்லூா் வட்டம், பெண்ணைவலம் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் பணி செய்த பயனாளிகளுக்கு 3 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதைத் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் பெண்ணைவலம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் கடலூா்-சித்தூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பணி செய்த திட்டப் பயனாளிகளுக்கு ஊதியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.