நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மயிலம் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியா் ( உற்சவா்).

Published On :28 அக்டோபர் 2026, 3:43 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு மயிலம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்பிரமணியா் மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 11 மணிக்கு பால், தயிா், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, பன்னீா் போன்ற நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பின்ன மூலவா் சுப்பிரமணியா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 8 மணிக்கு உற்சவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் மலை வலம் எழுந்தருளினாா். இந்நிகழ்ச்சிகளில் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப் படிகோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.