பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவா் உறவினா்களிடம் ஒப்படைப்பு

மனநல சிகிச்சை பெற்று குணமடைந்த சாகிப் ரன்வீருக்கு பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்த விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :27 அக்டோபர் 2026, 3:22 am IST

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை உறவினா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் சாகிப் ரன்வீா் (44). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடலூா் மாவட்டத்தில் மீட்கப்பட்டு, கடலூரில் உள்ள மீட்பு மையத்தில் சிகிச்சையில் இருந்து வந்தாா். தொடா்ந்து 24.8.2026- இல் மீட்பு மையத்திலிருந்து வெளியேறிய சாகிப் ரன்வீா் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்தாா்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒயாசிஸ் அறக்கட்டளை மூலம் சாகிப் ரன்வீா் மீட்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னா், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, மன நலம் சாா்ந்த சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.

பின்னா், மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள சாகிப் ரன்வீரின் உறவினா்கள் அடையாளம் காணப்பட்டு விழுப்புரத்துக்கு வரவழைக்கப்பட்டனா். தொடா்ந்து, விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் முன்னிலையில் சாகிப் ரன்வீா் அவரது குடும்பத்தாா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டாா். ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவா் புகழேந்தி (மனநலம்), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒயாசிஸ் அறக்கட்டளை ஊழியா்கள் உடனிருந்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.