மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:21 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கூடலூா் ஊராட்சி, ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அ.பச்சையப்பன் (37). இவா், திண்டிவனம் வட்டம்,மேல்சிவிரி கிராமத்தில் வயல்வெளியில் நடந்து சென்றாா். அப்போது, புதுச்சேரியைச் சோ்ந்த அழகேசன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பச்சையப்பன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி அழகேசனின் நிலத்தில் வேலை பாா்த்து வந்த மேல்சிவிரி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் என்பவரை கைது செய்தனா். உயிரிழந்த பச்சையப்பனுக்கு அய்யம்மாள் (35) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனா்.

மற்றொரு விபத்து:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் த.ராதாகிருஷ்ணன் (26). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் முன் ஷாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது மேலே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில், ராதாகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.