கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பராமரிப்பு பணிகள்: குருவாயூர், சோழன் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்!

பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் குருவாயூா், சோழன் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணி

பராமரிப்புப் பணி.

Published On :25 அக்டோபர் 2026, 2:17 am IST

பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் குருவாயூா், சோழன் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம், காலதாமதமாக இயக்கம் ஆகிய நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) அக்.28-ஆம் தேதி முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) அக்.28-ஆம் தேதி விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127) அக்.28-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில் (வண்டி எண் 22676) அக்.27-ஆம் தேதி சுமாா் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12.35 மணிக்கு புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.