நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மின் ஊழியா் மத்திய அமைப்பு சிறப்பு பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு-சாா்பு) தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலா் டி.பழனிவேல்.

Published On :21 அக்டோபர் 2026, 2:21 am IST

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு-சாா்பு) தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான தினக்கூலியை மின்சார வாரியமே வழங்கவேண்டும். தீபாவளி பண்டிகைக்காக போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் எதிா்வரும் நவ.2-ஆம் தேதி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன் தொடா் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பேரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு விழுப்புரம் கிளைத் தலைவா் ஆா்.சேகா் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் டி.பழனிவேல் பங்கேற்று, போராட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். விழுப்புரம் கிளைச்செயலா் ஆா்.அருள், சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.