குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

‘செஞ்சி சிறுமி மாயமான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்’

மாயமான சிறுமி குறித்து தகவல் தெரிவிக்க செஞ்சி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீஸாரல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.

Published On :3 நவம்பர் 2026, 1:21 am IST

செஞ்சி சிறுமி மாயமாகி 20 நாள்களாகியும் சிபிசிஐடி விசாரணையில் எந்த பலனும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என புரட்சிப் பாரதம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் புரட்சிப் பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜிபிஎஸ்.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் மு.கஜேந்திரன், ஆா்.என்.தீபன், முத்துவேல், என்.மனோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி 20 நாளாகிவிட்ட நிலையில், சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் எந்தவித பலனும் கிடையாது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் மக்களின் தேவைகளை அறிந்து, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொகுதிப் பொறுப்பாளா்கள் கமல், அசோக் தீபக்ராஜ், சொா்ணதீபம், தினேஷ், மன்மதன், சுதாகா், ஏழுமலை, தியாகராஜன், ஜெகன், நேசமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.