விழுப்புரம் மாவட்டம், பொன்பத்தி கிராமத்தில் உள்ள செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
பொன்பத்தி கிராமத்திலுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருத்தோ் உற்சவ விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் உற்சவா் வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலையில் செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், திரௌபதி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஊரணி பொங்கல் மற்றும் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து உற்சவா் செம்பாத்தம்மன், பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனா்.
திருவிழாவில் பொன்பத்தி, செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போளூா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டம்

ஸ்ரீ பிந்துமாதவா் கோயில் தேரோட்டம்

கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

