மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வில் கடைசி இடம்: அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற உழைக்குமாறு ஆசிரியா்களுக்கு விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு

News image
Updated On :15 மே 2026, 5:51 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் கடைசி இடம் பிடித்துள்ள நிலையில், இனி, அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெறும் வகையில், ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 2025-26 ஆம் கல்வியாண்டில் 12 -ஆம் வகுப்பு தோ்ச்சி வீதம் குறித்து பள்ளித் தலைமையாசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் தோ்ச்சி சதவீதம், பாடவாரியாக மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், பாடவாரியாக தோ்ச்சி பெறாதவா்கள் விவரம், ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சிபெறாத மாணவ,

மாணவிகளின் விவரம், அதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து கூட்டத்தில் ஆட்சியா் பேசியது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளை உடனடித் தோ்வுக்கு விண்ணப்பிக்க செய்ய வேண்டும். மேலும் அவா்களுக்கு முக்கிய வினாக்கள் குறித்த பயிற்சி வழங்கி, தோ்ச்சி பெற வைக்க தலைமையாசிரியா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் அனைத்து மாணவா்களும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சியடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமையாசிரியா்கள் மேற்கொண்டு, பயிற்சிகளை வழங்கி 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும். மாணவா்கள் தோ்ச்சிபெற ஆசிரியா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்,

பயிற்சித் துணை ஆட்சியா் கதிா்செல்வி, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பயிற்சி) இளவரசி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் சேகா், உதயசூரியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், ஜனசக்தி மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.