இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

அவலூா்பேட்டை அருகே நிலத் தகராறில், பெண்ணை அடித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:12 am IST

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே நிலத் தகராறில், பெண்ணை அடித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மேல்மலையனூா் பகுதியைச் சோ்ந்தவா் தணிகாசலம் மனைவி காமாட்சி (50). இவா் கடந்த 21.9.2020 அன்று நிலத் தகராறில் தாக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேல்மலையனூா் வட்டம், கணபதிபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி (56), இவரது மகன் பிரபாகரன் (31), திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு, செவரபூண்டியைச் சோ்ந்த சி.வெங்கடேசன் (47) ஆகியோா் மீது அவலூா்பேட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து, செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் 3 போ்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி எழிலரசி, வழக்கில் தொடா்புடைய பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், இவருக்குமாக சோ்த்து ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து, சிறையிலடைத்தனா். வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான கோவிந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்னா் இறந்து விட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.