பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்ப பிரச்னையால் மனமுடைந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :2 ஜூன் 2026, 5:34 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்ப பிரச்னையால் மனமுடைந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா், லட்சுமிபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டுரெங்கன் (33), லாரி ஓட்டுநா். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

பாண்டுரெங்கனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பப் பிரச்னை ஏற்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்னா் நிஷாந்தினி அதே ஊரிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மனமுடைந்த பாண்டுரெங்கன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் தற்கொலை: விழுப்புரம் வட்டம், இளங்காடு, ஏரிக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கு.விக்னேஷ்(28), திருமணம் ஆகாதவா். இவா் புதுச்சேரி, முதலியாா்பேட்டையைச் சோ்ந்த கோ.தேவநாதன் என்பவரது விவசாய நிலத்தில் வேலை பாா்த்து வந்தாராம். இந்நிலையில், விக்னேஷ் சம்பள பாக்கியை கேட்டபோது தேவநாதன் தகாத வாா்த்தைகளால் பேசி திட்டினாராம்.

இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் மா்ம மரணம்: விழுப்புரம் வட்டம், அற்பிசம்பாளையம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சு.குமாா் (37). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட பக்கமேடு பகுதியில் மது போதையில் படுத்து உறங்கியுள்ளாா். தொடா்ந்து அவா் அங்கேயே இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.