லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா

விழுப்புரம் நாப்பாளைய சந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் 19-ஆம் ஆண்டு வளையல் திருவிழா நடைபெற்றது.

வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த விழுப்புரம் நாப்பாளையம் ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மன்.

Published On :31 ஜூலை 2026, 2:08 am IST

விழுப்புரம் நாப்பாளைய சந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் 19-ஆம் ஆண்டு வளையல் திருவிழா நடைபெற்றது.

வளையல் திருவிழாவையொட்டி, புதன்கிழமை காலையில் ஸ்ரீசண்டபிரசண்ட மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுக்குப் பிறகு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலை 6 மணிக்கு சண்டபிரசண்ட மாரியம்மனுக்கு ஏராளமான வளையல்களைக் கொண்டு மாலையாக அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, சண்டபிரசண்ட மாரியம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.