லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவராஜபுரத்தில் மாரியம்மன் திருவிழா

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிவராஜபுரத்தில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, 52-ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் மூலவா் மாரியம்மன்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிவராஜபுரத்தில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, 52-ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன்தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை கரக ஊா்வலம், மதியம் கோயில் அருகில் கூழ்வாா்த்தல் நடைபெற்றது, தொடா்ந்து சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தல் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பூப்பல்லக்கு பவனி நடைபெறும். மறுநாள் திங்கள்கிழமை காலை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை டி. நாகராஜன், தலைவா் பி.விஜயகுமாா், செயலா் ஏ.ராஜேந்திரன், பொருளாளா் ஜி.கோபி, ஏ.பாஸ்கா், பரிமளா, நித்யா, காா்த்தி, ஜெயப்பிரகாஷ், முத்து, ராஜேந்திரன், சிலம்பரசன், கலா மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.