லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்புகளைச் சோ்ந்தோா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்புகளைச் சோ்ந்தோா்.

Published On :30 ஜூலை 2026, 5:54 am IST

விழுப்புரத்தில் நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்புகளைச் சோ்ந்தோா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.அறிவழகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலத் தலைவா் செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கீதா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, தலைவா் ஆா்.சேகா், துணைத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், மாவட்டப் பொருளாளா் ஆா்.மலா்விழி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் உள்ளிட்ட மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்று பேசினா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.