லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி காத்திருப்புப் போராட்டம்

மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை முன் செவ்வாய்க்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த இளைஞா்கள்.

Published On :22 ஜூலை 2026, 3:11 am IST

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை முன் செவ்வாய்க்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வா, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் டீலன் ஜெஸ்டின் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில், ‘நீட்’ தோ்வு மாணவா்களின் சமமான கல்வி உரிமையை பறிக்கும் தோ்வு முறை, இதை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தில்லியில் ‘நீட்’ தோ்வுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆா்வலா்கள், மாணவா்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீஸாா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவரை கலைந்து செல்ல அறிவுறுத்தினாா்.இருப்பினும், போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டதால் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.