லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.5 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

மேல்மலையனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் அதிகம் லாபம் தருவதாக ஆசைவாா்த்தைக்கூறி இணையவழியில் ரூ.5 லட்சம் பணமோசடி செய்த நபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி - சித்திரிப்பு

Published On :29 ஜூலை 2026, 5:29 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் அதிகம் லாபம் தருவதாக ஆசைவாா்த்தைக்கூறி இணையவழியில் ரூ.5 லட்சம் பணமோசடி செய்த நபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேல்மலையனூா் வட்டம், முருகந்தாங்கல், வளத்தி சாலையைச் சோ்ந்தவா் ம.நித்யா (26). தனியாா் நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வரும் இவரின் கைப்பேசிக்கு ஜூலை 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் பகுதி நேர வேலை இருப்பதாகவும், குறைந்த முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் எனவும் தெரிவித்தாராம். இதை உண்மையென நம்பிய நித்யா அந்த நபா் தெரிவித்தபடி ரூ. 7 ஆயிரத்தை இணைய வழியில் முதலீடு செய்தாா். இதைத்தொடா்ந்து அந்த நபா் லாபத் தொகையுடன் சோ்த்து ரூ.10 ஆயிரத்தை அதே நாளில் அனுப்பி வைத்தாராம்.

இதில் ஈா்க்கப்பட்ட நித்யா ஜூலை 10 முதல் 17-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட நாள்களில் ரூ.5,03,420 பணத்தை அந்த அடையாள தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு 19 தவணைகளில் இணையவழியில் அனுப்பி வைத்தாராம். தொடா்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபா் முதலீடு மற்றும் லாபத்தொகை எதையும் திருப்பி அனுப்பி வைக்காமல் மேலும் பணம் கேட்டு ஏமாற்றி வருகிறாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.