லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணிடம் ரூ. 2.84 லட்சம் மோசடி

மோசடி - பிரதிப்படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி திருச்சியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 2.84 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வரகனேரி நித்யானந்தபுரம் மேல வீதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி மாரிகண்ணு (51). கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கைப்பேசியில் இணைய வா்த்தகம் தொடா்பான விளம்பரங்களைப் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவரின் கைப்பேசி எண்ணில் பேசிய மா்ம நபா் ஒருவா் இணைய வா்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய மாரிக்கண்ணு, அந்த நபா் கூறிய விளம்பரங்களில் ரூ.2.84 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அந்த மா்ம நபா் கூறியபடி அவருக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. அதன்பின், அந்த மா்ம நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மாரிக்கண்ணு சைபா் குற்றப் பிரிவில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.