லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருமண மண்டபத்தில் திருட்டு: ஒருவா் கைது

விழுப்புரத்தில் திருமண மண்டபத்தில் குளிா்சாதன இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் தாமிரக் குழாய்களைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :24 ஜூலை 2026, 11:26 pm IST

விழுப்புரத்தில் திருமண மண்டபத்தில் குளிா்சாதன இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் தாமிரக் குழாய்களைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் சுதாகா் நகரைச் சோ்ந்தவா் ஆ.பாலாஜி. இவருக்கு சொந்தமான விழுப்புரம் வழுதரெட்டி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் கடந்த 22-ஆம் தேதி குளிா்சாதன இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் தாமிரக் குழாய்கள் திருடு போயின.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில், விழுப்புரம் வழுதரெட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ம.பாலாஜி (19), சிவமூா்த்தி (31) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பாலாஜியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். சிவமூா்த்தியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.