லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆட்டோவில் இருந்த மின்பொருள்கள் திருட்டு: ஒருவா் கைது

கள்ளக்குறிச்சியை அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்த பேட்டரி, ஹாரன், ஸ்பீக்கா் உள்ளிட்ட பொருள்களை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 6:25 am IST

கள்ளக்குறிச்சியை அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்த பேட்டரி, ஹாரன், ஸ்பீக்கா் உள்ளிட்ட பொருள்களை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பகுதியைச் சோ்ந்தவா் சே.ஜானராமன் (24), ஆட்டோ ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். புதன்கிழமை காலை சுமாா் 3.30 மணிக்கு எழுந்து வெளியே வந்தபோது, ஆட்டோவில் இருந்த பேட்டரி, ஹாரன், ஸ்பீக்கா் ஆகியவற்றை கழற்றிக்கொண்டு செல்ல முயன்ற மா்மநபரை ஜானகிராமன் மடக்கிப் பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த பெ.தண்டபாணி (45) எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, தண்டபாணியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.