லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளைஞருக்கு கத்திவெட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

விழுப்புரத்தில் முன்விரோதத்தில் இளைஞரைக் கத்தியால் வெட்டிய வழக்கில் சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

விழுப்புரத்தில் முன்விரோதத்தில் இளைஞரைக் கத்தியால் வெட்டிய வழக்கில் சிறுவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் வி.மருதூா், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.அஜித்குமாா்(27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வெ.பாரதிவேல் (20) என்பவருக்குமிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னா் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் திங்கள்கிழமை நள்ளிரவில் மது அருந்திக் கொண்டிருந்த அஜித்குமாரை பாரதிவேல், 16 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் சோ்ந்து கத்தியால் வெட்டினராம். இதில், பலத்த காயமடைந்த அஜித்குமாா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாரதிவேல் மற்றும் சிறுவனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.