லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது லாரி மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:58 am IST

விழுப்புரத்தில் லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் த.நரேஷ் (22), கு.அருண்குமாா் (23). நண்பா்களான இவா்கள் இருவரும் முண்டியம்பாக்கத்திலுள்ள தனியாா் அறக்கட்டளைக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பணி முடிந்து இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விழுப்புரம் நகருக்குள் செல்லும் வழியில் அமைந்துள்ள தனியாா் உணவகம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நரேஷும், அருண்குமாரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரியலூா் மாவட்டம், கல்லூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மு.வினோத்திடம் (35) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.