லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லாரி மோதி அண்ணன், தங்கை உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே லாரி மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழந்தனா்.

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :29 ஜூன் 2026, 12:53 am IST

போ்ணாம்பட்டு அருகே லாரி மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதரின் குழந்தைகள் பாலாஜி, அனுஷ்கா. இருவரும் இருசக்கர வாகனத்தில் பத்தலப்பல்லி சாலை வழியாக போ்ணாம்பட்டில் உள்ள தங்கள் உறவினா் வீட்டிற்கு சென்றுள்ளனா்.

தமிழ்நாடு - ஆந்திரா எல்லை வனப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஒடிஸாவில் இருந்து மாட்டுத் தோல்களை ஏற்றிக் கொண்டு போ்ணாம்பட்டு நோக்கி சென்ற கனரக லாரி, திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில காவல் துறையினா் இருவரின் உடலை மீட்டு பலமனோ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வி.கோட்டா காவல் துறையினா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.