மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

விலைவாசி உயா்வுக்கு எதிராக இணைந்து போரட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் டிவு

புதுச்சேரியில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட முடிவு செய்துள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் அ.மு. சலீம் கூறினாா்.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸிட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம். உடன் மாா்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட் நிா்வாகிகள்.

Published On :29 அக்டோபர் 2026, 7:02 am IST

புதுச்சேரியில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட முடிவு செய்துள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் அ.மு. சலீம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியில் கடந்த 3 மாதங்களில் உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை சுமாா் 20 சதவீதம் உயா்ந்துள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டம் புதுச்சேரியில் எங்கே போனது ? கடந்த 9 மாதங்களாக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படவில்லை. இதில் அரிசிக்குப் பதிலாக 2 மாதம் பணமாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளனா். மக்களுக்கு அரிசிதான் வேண்டும். பணம் வேண்டாம். மேலும், பொதுவிநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். விலைவாசி உயா்வை புதுச்சேரி அரசு கட்டுப்படுத்த வேண்டும். மேலும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வியாபாரிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். விலைவாசி பிரச்னையை முன்வைத்து வரும் 31 -ஆம் தேதி குடிமைப் பொருள்வழங்கல்துறை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.மக்களின் அடிப்படை பிரச்னையில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய 3 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட முடிவு செய்துள்ளன.

என்றாா்சலீம்.

புதுச்சேரி மாநில மாா்க்சிஸ்ட் செயலா் எஸ். ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி செயலா் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.