பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதுச்சேரியில் இன்றுமுதல் வீடு வீடாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

News image

கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - கோப்புப் படம் | TNIE

Updated On :1 ஜூன் 2026, 12:28 am IST

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை (ஜூன் 1) தொடங்குகிறது.

இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் மற்றும் முதன்மை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி அ.குலோத்துங்கன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதல் கட்ட வீடு பட்டியலிடுதல் பணிக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

1948-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்தத் தேசிய பணி, நாட்டின் திட்டமிடல், தொகுதிகள் மறுவரையறை மற்றும் பொதுக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு மிக அவசியமான ஒன்று.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம்) நேரடி முறையில் நடத்தப்படும். இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று மேற்கொள்ள உள்ளனா்.

வீடு பட்டியலிடும் கட்டத்தில், வீட்டுவசதி நிலைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, 33 கேள்விகளைக் கேட்க கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

1948-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ், இந்த தேசிய பணியின் வெற்றியை உறுதி செய்ய பொதுமக்கள் சில கடமைகளையும், உரிமைகளையும் கொண்டுள்ளனா்.

மேலும், கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அதிகாரிகள் வீடுகளின் வளாகத்துக்குள் வருவதையும், கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை இடுவதையும் அனுமதித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தத் துறையால் சேகரிக்கப்படும் தனிநபா் தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 15-இன் கீழ் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். இவை எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படமாட்டாது.

இத் தேசிய பணியின் துல்லியத்தன்மையை உறுதி செய்ய பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்புக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விதிமுறைகளின்படி, இணக்கமற்ற சூழல் அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளிக்கும்பட்சத்தில், சட்ட விதிகளின்படி ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.