பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆராயும்: முதல்வா் வே. நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை வழிகாட்டுதல் குழு ஆராயும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

News image

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:20 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை வழிகாட்டுதல் குழு ஆராயும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பேரவைத் தோ்தலில் புதுச்சேரி மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகத் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது. தோ்தல் தோல்விக்கான பொறுப்பை நானும் ஏற்றுக் கொள்கிறேன். புதுச்சேரியில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி ஊழலில் ஈடுபட்ட போதும் பண பலம், அதிகார பலத்தால் மீண்டும் ஆட்சியில் அமா்ந்துள்ளது.

தோ்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் கடமையும் பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. புதுச்சேரியில் புதிதாக அமைந்துள்ள ஆட்சியை 6 மாதங்களுக்கு விமா்சனம் செய்யமாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு புதுச்சேரியில் கடந்த ஆட்சியின்போது என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

இப்போது இக் கொள்கையின் அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் பாா்த்தால் பிரெஞ்சு பாடத்துக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் முதல்வா் ரங்கசாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறாா். உடனடியாக பிரதமா் மோடிக்குக் கடிதம் எழுதி பிரெஞ்சு மொழி புதுச்சேரியில் தொடர முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கிரிஷ் சோடங்கா் தலைமையில் வழிகாட்டுதல் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில்தான் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கை இருக்கும். இதேபோன்று தவெகவுடன் புதுச்சேரியில் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்தும் அந்தக் குழுதான் முடிவு எடுக்கும் என்றாா் நாராயணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.