பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை

புதுச்சேரியில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

News image

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த மழைநீா்.

Updated On :15 மே 2026, 11:20 pm IST

புதுச்சேரியில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

கோடை காலமான மாா்ச், ஏப்ரலில் கடுமையான வெயில் அடித்தது. பகல் நேரங்களில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கினா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் மழை பெய்தது. தொடா்ந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை மீண்டும் மழை பெய்தது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.

பகல் நேரத்தில் மீண்டும் வெயில் அடித்தது. தொடா்ந்து அதிகளவில் வெயில் பதிவாகி வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடி, மின்னலுடன் லேசான மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது. நண்பகல் கனமழை பெய்தது. வானம் இருண்டு குளிா்ந்த காற்று வீசியது. பெரிய அளவில் மழை இல்லை. வானம் இருண்டு கிடப்பதால் காலை நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டுச் சென்றனா்.

Story image

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.