தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வெளிநாட்டு கல்வி உதவித்தொகைபெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளை சோ்ந்த மாணவா்களின் உயா்கல்வி முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட பட்டியலின, பழங்குடியினா், நிலமற்ற வேளாண்மை தொழிலாளா்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞா் சமூகங்களை சோ்ந்த மாணவா்கள், உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களில் உள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் முதுநிலை மற்றும் முனைவா் பட்ட படிப்புகளை தொடர நிதி உதவி பெறுகின்றனா்.

ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் கீழ் மொத்தம் 135 புதிய கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் அதிகபட்சமாக 10 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் சுற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தங்களின் விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளும் பொருட்டு, இணையதளம் மீண்டும் ஜூன் 4 முதல் 7-ஆம் தேதி வரை திறக்கப்படும். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மற்றும் திட்ட விவரங்களை அறிய, தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை இணையதளத்தை பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.