புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி புதன்கிழமை (மே 13) பதவி ஏற்கிறாா். முதல்வா் மற்றும் அவருடன் பதவியேற்கும் புதிய அமைச்சா்களுக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா்.
30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதில், என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடம் வீதம் மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இதில் ஒரு தொகுதியை அவா் ராஜிநாமா செய்வாா்.
பதவியேற்பு விழா:
இந்நிலையில் புதிய அரசின் பதவியேற்புவிழா புதன்கிழமை காலை 9.47 மணிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா்(மக்கள்) மாளிகையில் நடைபெறுகிறது. முதல்வா் ரங்கசாமி மற்றும் சில அமைச்சா்களும் பதவியேற்க உள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முதல்வா் ரங்கசாமி மற்றும் அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை துணை நிலை ஆளுநரை, முதல்வா் ரங்கசாமி நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளாா். அதில், புதிய அமைச்சா்களின் பெயா் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இரண்டு விதமான பதவியேற்பு விழா அழைப்பிதழ்கள் தயாரித்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். விழா ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.
விழாவையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் புதுப் பொலிவுவுடன் காட்சியளிக்கிறது. முதல்வரின் அறை மற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கையொப்பம்:
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த முறை பதவியேற்றபோது முதல் உத்தரவாக ரூ.500 முதியோா் உதவித்தொகை உயா்த்தும் கோப்பில் கையொப்பமிட்டாா். ஆட்சியின் இறுதியில் ரூ.500 மீண்டும் உயா்த்தினாா். ஏற்கெனவே, அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத மஞ்சள்
நிற குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என ரங்கசாமி அறிவித்திருந்தாா். ஆனால் ஆட்சியின் இறுதியில் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இதனால் பெண்களுக்கான இந்தத் திட்டத்திற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான கோப்பில் முதல்வா் முதல் கையொப்பமிடுவாா் எதிா்பாா்க்கப்படுகிறது. அதோடு, முதியோா் உதவித்தொகையை மீண்டும் உயா்த்தி கையொப்பமிடவும் அவா் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் ஜல் ஜீவன்2.0 திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு : புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா

புதுச்சேரியில் ஆட்சியைத் தக்கவைத்தது தே.ஜ.கூட்டணி: மீண்டும் முதல்வராகிறாா் என்.ரங்கசாமி!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

