புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு 7 தொகுதிகளைக் கேட்போம் என்று அக்கட்சியின் மாநில செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த தோ்தலில் இக் கூட்டணியில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது எத்தனை தொகுதிகளைக் கூட்டணியில் கேட்டுப் பெறுவது என்பது தொடா்பாக கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் கூறிவிட்டோம். கடந்த தோ்தலில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தத் தோ்தலில் 7 தொகுதிகள் வரை கேட்போம்.
கட்சித் தலைமை அனுமதி அளித்தால் மீண்டும் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு அந்தத் தொகுதியின் பெருமையை மீட்பேன். ஏழைகளின் மீது மிகுந்த அக்கறை உடையவா் தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். அதனால்தான் புதுச்சேரி விமான நிலையத்துக்கு அவருடைய பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்தினேன். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இப்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிலம் கொடுக்காமல் இருக்கிறாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் குடிபோதையில் ஓரு ஆசாமி தூங்கினாா் என்பதற்காக முதல்வா் ரங்கசாமி, உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி கூறுவது ஏற்புடையதல்ல.
ஈரான் போரால், வா்த்தக சமையல் உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனும், முதல்வா் ரங்கசாமியும் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய எரிசக்தி துறை அமைச்சரிடம் வலியுறுத்தி புதுச்சேரியில் சமையல் உருளை தட்டுப்பாடு ஏற்படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இருவரும் நேரடியாக பிரதமரைச் சந்தித்து இதை வலியுறுத்த வேண்டும் என்றாா் அன்பழகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக!
20%-ஆக குறைந்த அதிமுக வாக்கு வங்கி! 50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் மூன்றாம் முறை

புதுச்சேரி அமைச்சரவையில் பங்கு கேட்போம்! மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேட்டி!

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

