புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் மொத்தமாக 410 பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் சுமாா் 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இதுதவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-33, தனியாா் பள்ளிகள்-318 உள்ளன.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் சில தனியாா் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த மாா்ச் மாதத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வு நடத்தி முடிக்கப்பட்டு ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை விடுமுறை விடப்பட்டது.
தொடா்ந்து, ஏப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன. கோடை வெயில் காரணமாக, ஏப்.27-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையொட்டி பள்ளி வளாகம், வகுப்பை, கழிவறைகளை சீரமைத்து சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் புதுச்சேரியிலும் ஜூன் 3 வரை கோடை விடுமுறை நீடிக்கப்பட்டு,
4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா். அறிவித்தபடி , கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோா்களும் பிள்ளைகளுக்கு தேவையான துணிமணிகள், காலணிகள், நோட்டுகள், உள்ளிட்டவற்றை வாங்கி பிள்ளைகளை தாயா் படுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களை வாழ்த்தி வரவேற்ற ஆசிரியா்கள்

ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

