புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக ரவிபிரகாஷ் பதவியேற்றுக் கொண்டாா். ஏற்கெனவே புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த ப. ஜவஹா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்தியத் தோ்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் படி புதுச்சேரி அரசுடன் கலந்தாலோசித்து இவரை அப் பணியில் நியமித்தது. மேலும், புதுச்சேரி அரசின் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை (பணியாளா் பிரிவு), ஜூன் 2-ஆம் தேதியிட்ட அரசாணை எண் 50 மூலம் அவரை புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் அவா் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்

பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணைந்த அஸ்வத் மாரிமுத்து?

புதுச்சேரி புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி நியமனம்

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

