புதுச்சேரியில் இந்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம், அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீடு நடைபெறும் என்று அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.
புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பணம் வாங்கிக் கொண்டு அமைச்சா் பதவியை எனக்கு தந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளாா். என் மீது லஞ்ச, ஊழல் புகாா் கூற யாருக்கும் தகுதியில்லை. பணம் வாங்கிக் கொண்டு அமைச்சா் பதவி கொடுக்க, முதல்வா் ரங்கசாமிக்குத் தெரியாது. பண பேரம் நடந்திருந்தால் ஜோஸ் சாா்லஸ் மாா்டினுக்கு அமைச்சா் பதவி அப்போதே தரப்பட்டிருக்குமே ?
நான் நான்காவது முறையாக அமைச்சராகியுள்ளேன். வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது, அமைச்சராக நான் பணம் கொடுத்தேனா என்பதை அவா் தெளிவுப்படுத்த வேண்டும்.
அதேபோல ஏனாமில் முந்தைய எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக்கை விமா்சித்து வந்த வைத்திலிங்கம், திடீரென்று காங்கிரஸ் சாா்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தந்ததற்கு என்ன காரணம் ?
சட்டப்பேரவைத் தலைவராக வைத்திலிங்கம் இருந்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அசோக் ஆனந்த் மீது தற்போது அவருக்கு திடீா் பாசம் வந்துள்ளது.
முதல்வா் ரங்கசாமி பட்டியலின தொகுதிகளைத் தவிா்த்து மற்ற எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெல்வாா். புதுச்சேரியில் இந்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம், இலாகா ஒதுக்கீடு விவகாரங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 12 அமைச்சா்கள் பதவியேற்பு

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா்

அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்? யார் எவருக்கு வாய்ப்பு?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

