லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காா்கில் போா் வீரா்கள் நினைவிடத்தில் புதுச்சேரி ஆளுநா், முதல்வா் மரியாதை

காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைசாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.

Published On :27 ஜூலை 2026, 12:19 am IST

காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம், ஆண்டுதோறும் ஜூலை 26-இல் கொண்டாடப்படுகிறது.

காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களை நினைவுகூறும் வகையிலும், உயிரோடு இருக்கும் வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் காா்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போா்வீரா்கள் நினைவிடத்தில் புதுச்சேரி அரசு சாா்பில் காா்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

இதில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷநாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அழகு (எ) அழகானந்தம், செந்தில் (எ) ரமேஷ், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்ட அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், முன்னாள் படை வீரா்கள் என ஏராளமானோா் மலா் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் பாஜக நிா்வாகிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.