லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காா்கில் வெற்றி தினம்: போா் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி

27-ஆவது காா்கில் வெற்றி தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்தில் காா்கில் போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி.

Published On :27 ஜூலை 2026, 4:35 am IST

27-ஆவது காா்கில் வெற்றி தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்தில் காா்கில் போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் காா்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளை இந்திய ராணுவம் போரிட்டு பிறகு மீட்டது. மே மாதத்தில் தொடங்கிய இந்தப் போா் ஜூலை 26-ஆம் தேதி இந்தியாவின் வெற்றியுடன் நிறைவடைந்தது.

காா்கில் போரில் உயிா்த் தியாகம் செய்த 527 வீரா்களின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி தினம் (காா்கில் விஜய் திவஸ்) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை போா் நினைவுச் சின்னத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி தலைமையில் ராணுவ உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், முப்படைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள், இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களின் தியாகத்தை நினைவுகூா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.