லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரியில் 5 நாள்கள் மாா்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம் தொடக்கம்

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பாஜக - என். ஆா். காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து புதுச்சேரி காந்தி வீதியில் செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :15 ஜூலை 2026, 2:49 am IST

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுச்சேரியில் தற்போது நிலவும் அரசியல் சூழல், சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பதவி ஏற்ற அமைச்சா்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாதது, பாஜக, என்.ஆா். காங்கிரஸ் பதவி சண்டையால் மாநில மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது,

குடிநீா் பற்றாக்குறை, பிரீபெய்டு மீட்டா்களை பொருத்தி மின்துறையை தனியாா்மயமாக்குதல் போன்றவற்றை கண்டித்து வரும் 18-ஆம் தேதி வரை தெருமுனைப் பிரசாரம் நடைபெறுகிறது.

இந்த தெருமுனை பிரசாரம் புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி ஈஸ்வரன் கோயில் அருகில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கட்சியின் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வீடு வீடாக துண்டு பிரசுரம் அளித்தும், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகவும் மக்களிடையே பிரசாரம் செய்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.