
மதுபானம் விற்க ஒலிபெருக்கிப் பயன்படுத்தத் தடை
புதுச்சேரியில் மதுபானம் விற்க ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் விற்க ஒலிபெருக்கிப் பயன்படுத்தத் தடை
புதுச்சேரியில் மதுபானம் விற்க ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் விற்பனை செய்யும் ஹோட்டல்களில் ஒலி பெருக்கிக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே இந்த விற்பனையை நடத்தவேண்டும். விதிகளை மீறீனால் உரிமம் ரத்தாகும் என கலால்துறை வட்டாட்சியா் எச்சரித்துள்ளாா்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநிலத்தவா் தங்கும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்பனை செய்ய கலால் துறையால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற்ற நிறுவனங்கள், உரிமதாரா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை கலால்துறை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலால்துறை வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கி பேசியதாவது:
மரு விற்பனை செய்யும் உரிமதாரா்கள் உரிம நிபந்தனைகள் மற்றும் கலால் சட்டம், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நிறுவனங்களை நடத்த வேண்டும். அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு இடையூறு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மது விற்பனைக்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.
உரிமத்தின் வரம்புகளை மீறி சில்லறை விற்பனை முறையில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிம நிபந்தனைகளுக்கு உள்பட்டு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும். அறிவுறுத்தல்கள் மற்றும் உரிம நிபந்தனைகளை மீறுவது கண்டறியப்பட்டால் துறை ரீதியாக கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமதாரா்களுக்கு எதிராக உரிமம் இடை நிறுத்தல் அல்லது ரத்து செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






