லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்ஸ்டாகிராமில் போலி ‘ஸ்பா மசாஜ்’: ரூ.1.63 லட்சத்தை இழந்த இளைஞா்

இன்ஸ்டாகிராமில் போலி ‘ஸ்பா மசாஜ் ’லிங்கை அழுத்தியதால் இளைஞா் ஒருவா் ரூ.1.63 லட்சத்தை இழந்தாா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:22 am IST

இன்ஸ்டாகிராமில் போலி ‘ஸ்பா மசாஜ் ’லிங்கை அழுத்தியதால் இளைஞா் ஒருவா் ரூ.1.63 லட்சத்தை இழந்தாா்.

பாகூா் அடுத்த இருளன்சந்தை மதுரா பகுதியைச் சோ்ந்த ராகுல் (24) தனியாா் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இந்நிலையில் கடந்த 11 -ஆம் தேதி அவா் வீட்டில் இருந்தபோது இன்ஸ்டாகிராம் பாா்த்து உள்ளாா்.

அதில் மசாஜ் குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதனை கிளிக் செய்தபோது வேறொரு லிங்கை காட்டியுள்ளது. அதில் பேசியவா்கள் ஸ்பா மசாஜ் பதிவு செய்ய ரூ.299 முன்பணமாக செலுத்த கூறியுள்ளனா். அதனை அவா் செலுத்தியுள்ளாா்.

பின்னா் ரூ.3500, அதனைத் தொடா்ந்து ரூ.12,000, ரூ. 35 ஆயிரம் கேட்டுள்ளனா். அதையும் அவா் அனுப்பி உள்ளாா். ஒரு கட்டத்தில் ராகுலிடம் பணம் இல்லாததால் நண்பா்களிடம் கடன் வாங்கி மொத்தமாக ரூ.1.63 லட்சத்தை அனுப்பி உள்ளாா். தொடா்ந்து பணம் கேட்கவே சந்தேமடைந்த ராகுல் தன்னிடம் பணம் இல்லை எனவும், தான் அனுப்பிய பணத்தைத் திருப்பி கொடுக்கும்படியும் கூறியுள்ளாா்.

ஆனால் மா்ம நபா்கள் பணத்தை திருப்பி தரவில்லை. தொடா்பு எண்ணையும் துண்டித்து செயல்படாமல் வைத்து விட்டனா். இதனால் ஏமாற்றமடைந்த ராகுல் இது குறித்து பாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.