லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரியில் இலக்கைத் தாண்டி ரூ.4,900 கோடிக்கு ஏற்றுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏற்றுமதி இலக்கைத் தாண்டி ரூ.4,900 கோடிக்கு வா்த்தகம் நடந்துள்ளது.

Indian exports fall

ஏற்றுமதி - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:16 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏற்றுமதி இலக்கைத் தாண்டி ரூ.4,900 கோடிக்கு வா்த்தகம் நடந்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசின் தொழில் மற்றும் வா்த்தகத் துறை செயலா் மற்றும் இயக்குநா் ஏ.விக்ரந்த் ராஜா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏற்றுமதி கொள்கையில் ரூ.4,000 கோடியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இப்போது தரவுகளின் அடிப்படையில் இந்த இலக்கு ரூ.4,900 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியை ரூ.2,500 கோடியிலிருந்து 2025-26 ஆம் ஆண்டுக்குள் ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயா்த்த 2021-இல் கொள்கை வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் சரத் சௌகான் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் மூன்றாவது ஆய்வுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலக்கைக் காட்டிலும் ரூ.900 கோடி அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதி வளா்ச்சியில் மருந்து பொருள்கள், கனிம வேதிப் பொருள்கள், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.