லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

"சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏற்றுமதி அதிகரிப்பு: தமிழகம் 4-ஆம் இடம்'

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 11.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கோப்புப்படம்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:06 am IST

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 11.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து கடந்த 2024-25-இல் ரூ.14.63 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்ற நிலையில், 2025-26இல் இது ரூ.16.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023-24இல் ரூ.13.55 லட்சம் கோடி, 2022-23இல் ரூ.12.63 லட்சம் கோடி, 2021-22இல் ரூ.9.9 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றது.

கடந்த நிதியாண்டு ஏற்றுமதியில் குஜராத் (ரூ.4.05 லட்சம் கோடி) முதலிடத்திலும், கர்நாடகம் (ரூ.2.69 லட்சம் கோடி), மகாராஷ்டிரம் (ரூ.2.43 லட்சம் கோடி), தமிழகம் (ரூ. 2.12 லட்சம் கோடி) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்று தனது பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், "கடந்த 2014-15இல் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த 2025-26இல் ரூ.2.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக' அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.