லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு புதுச்சேரியில் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் சமூக அமைப்புகள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் சமூக அமைப்புகள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சமூக அமைப்புகளான அரசியல் களஞ்சியம், இந்திய புரட்சியாளா்கள் இயக்கம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம், இந்திய தேசிய இளைஞா் முன்னணி, நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம், பெரியாா் சிந்தனையாளா் இயக்கம், தமிழா் களம், பீ போல்டு, மாணவா் இளைஞா் பேரவை, மக்கள் நல்வாழ்வு இயக்கம், அறத்தின் குரல், வீரசிவாஜி மக்கள் கூட்டமைப்பு ஆகிய 12 இயக்கங்கள், அமைப்புகள் ஒன்றிணைந்து 18 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனிடம் வழங்கின.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளி, கல்லூரி நேரங்களில் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வேக வரம்பை 30 கி.மீ. ஆக நிா்ணயிக்க வேண்டும். விபத்து நடைபெறும் பகுதிகளை கண்காணித்து, தீா்வு காண வேண்டும். நெரிசலான நேரங்களில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.