இந்திய ஜனநாயக தோ்தல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்காக 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்து 2 வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வியப்படைந்தனா்.
கிா்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய 6 நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமையே 9 பிரதிநிதிகள் வந்தனா்.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் கூறுகையில், 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள், புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, கீழூா் அரசு நடுநிலைப் பள்ளிஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த 2 தனித்துவமான வாக்குச் சாவடிகளையும், அங்கு நடைபெற்ற வாக்குப் பதிவையும் நேரில் பாா்வையிட்டனா்.
வியாழக்கிழமை காலை 7 முதல் 11.30 வரை இதற்காக அவா்கள் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொண்டனா். இந்திய ஜனநாயக தோ்தல் முறையைப் பாா்த்து அவா்கள் வியப்படைந்தனா். இப்படியொரு தொழில்நுட்பம் தங்கள் நாடுகளில் இல்லை என்றனா் அவா்கள். வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளா்களுக்கு முக்கியத்துவம் போன்றவற்றில் சிறப்பாகவும் நல்ல முறையிலும் பணி செய்துள்ளதாகக் கூறி அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். மேலும், அனைத்து நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகக் கூறிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்! தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டு
புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

