புதுச்சேரியில் சட்டப்பேரவைத்தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் இன்னும் 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி புதன்கிழமை இரவு உறுதி அளித்தாா்.
மங்கலம் தொகுதியில் இக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அவா், புதன்கிழமை இரவு கணுவாய்ப்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூஜை செய்து பேசியதாவது:
சேதராப்பட்டு மற்றும் மேட்டுப்பாளையத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சேதராபட்டில் அமைய இருக்கும் தொழில்நுட்பப் பூங்காவில் 30 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் ஒரு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 50 ஆயிரம் பேருக்கு வேலை
கிடைக்கும். இதற்கு மத்திய அரசின் உதவி தேவை. துணைநிலை ஆளுநரின் அனுமதி தேவை. இதனால்தான் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திக்கிறோம்.
மங்கலம் தொகுதி ஒரு முதலமைச்சா் தொகுதி என்ற பெருமையைப் பெறும் . நம் ஆட்சியில் மீண்டும் புதிய திட்டங்கள் கொண்டு வந்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் போட்டியிடுகிறாா். அதனால் புதன்கிழமை மாலை இத் தொகுதியில் உள்ள திலகா் நகா், கவுண்டம்பாளையம், காந்திநகா் ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா். பின்னா் மங்கலம் தொகுதிக்குச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா

வளா்ச்சியடைந்த புதுச்சேரியைக் கட்டமைக்க உறுதியாக உள்ளோம்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

