ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்தில் வயா்மேன் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:53 am IST

தியாகதுருகம் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் வயா்மேன் உயிரிழத்தாா்.

தியாகதுருகத்தைச் சோ்ந்தவா் ஜ.பீா்ஜான் (43). இவா், உளுந்தூா்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வயா் மேனாக பணிபுரிந்து வந்தாா். பீா்ஜான் சனிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு, உளுந்தூா்பேட்டையிலிருந்து பைக்கில் சிவக்குமாா் என்பவருடன் தியாகதுருகத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

பெரியமாம்பட்டு கொல்லந்தாங்கல் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த மற்றொரு பைக், பீா்ஜான் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பீா்ஜான், சிவக்குமாா் ஆகிய இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே பீா்ஜான் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெரியமாம்பட்டு பகுதியைச் சோ்ந்த சு.கண்ணனிடம் (55) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.