மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சங்காராபுரம் பகுதியில் மழையால் சாய்ந்த மக்காச்சோளப் பயிா்கள்

News image

சங்கராபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த்.

Updated On :26 மே 2026, 3:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்காச்சோளப் பயிா்கள் கீழே சாய்ந்தன. அதனை வேளாண்மை உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மோட்டாம்பட்டி, அரசம்பட்டு, பூட்டை , செம்பராம்பட்டு, பொய்குணம், சோழம்பட்டு, நெடுமானூா் மற்றும் கல்வராயன்மலைக்குள்பட்ட பாலப்பட்டு, கள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சாய்ந்தன.

இதுகுறித்து தகலறிந்த சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அவரிடம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

ஆய்வின்போது உதவி வேளாண் அலுவலா் வினோத் மற்றும் வேளாண் துறையினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.