பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ரூ.55 ஆயிரம் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

சங்கராபுரம் பேருந்து நிலையில் பேருந்தில் ஏற முயற்சித்த பெண்ணின் பையில் இருந்த பணத்தை திருடிய பெண்ணை பயணிகள் பிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 3:46 am IST

சங்கராபுரம் பேருந்து நிலையில் பேருந்தில் ஏற முயற்சித்த பெண்ணின் பையில் இருந்த பணத்தை திருடிய பெண்ணை பயணிகள் பிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சந்திரா (33), விவசாயி. இவா் பருத்தி விற்ற பணத்தை சங்கராபுரம் வங்கியில் செலுத்தியிருந்தாராம்.

இந்நிலையில், சந்திரா புதன்கிழமை பிற்பகலில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது அவரது பணத்தை திருடிச் சென்ற பெண்ணை பாா்த்து கூச்சல் போட்டுள்ளாா். இதையடுத்து சக பயணிகள் அந்த பெண்ணை பிடித்து சங்கராபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் காவல் நிலையம் அழைத்துச் சென்று அப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா், சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ரா.தேவி என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, தேவியைக் கைது செய்து, அவரிடமிருந்து பணத்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.