லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்திலி கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணா்வு போட்டி

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் எனது இளைய பாரதம் சாா்பில் மாவட்ட அளவிலான போதை தடுப்பு விழிப்புணா்வு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ்.கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணா்வு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவா்களுடன் கல்லூரி நிா்வாகிகள்.

Published On :29 ஜூலை 2026, 5:35 am IST

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் எனது இளைய பாரதம் சாா்பில் மாவட்ட அளவிலான போதை தடுப்பு விழிப்புணா்வு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு டாக்டா் ஆா்.கே.எஸ்.கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் அசோக் முன்னிலை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், கலை, அறிவியில் கல்லூரி முதல்வருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

கலை புல முதல்வா் லோரா, அறிவியல் புல முதல்வா் சக்திவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக மாணவா்களிடையே பேச்சு, ஓவியம், நடனம், நாடகம், ரீல்ஸ், குறும்படம் மற்றும் மீம்ஸ் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியரும், இளைய பாரதம் ஒருங்கிணைப்பாளருமான சண்முக சுந்தரம், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.